பணிப்பாளராக மாஹிர் நியமனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் - சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளராக ஐ.எல்.எம். மாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறையைச் சேர்ந்த மாஹிர் - சர்வதேச விவகாரங்களில் நீண்ட அனுபவமிக்கவர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் பிரிவின் கீழ் மனித உரிமை ஆராய்ச்சியாளராக பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

இந்த பதவிக்காக நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட பரிட்சையில் ஐந்து பேர் சித்தியடைந்திருந்தனர். இந்த ஐவரில் மாஹிரும் ஒருவர்.

இதன் பின்னர் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக நீண்டகாலம் பணியாற்றியிருந்தார்.

இவர் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான அனுபவத்தை கொண்ட மாஹிருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை, இந்த பொறுப்பை வழங்கியுள்ளமை பொருத்தமானதே என்று கட்சியின் அபிமானிகள் வரவேற்புத் தெரிவிக்கின்றனர்.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

பணிப்பாளராக மாஹிர் நியமனம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More