
posted 25th January 2022
திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மட்டு.ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை நடத்தின.
இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியச் செயலாளர் எஸ்.நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
2006 இல் உயர்தரக்கல்வியை முடித்து பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
படுகொலை செய்யப்பட்ட இந்த மாணவர்களை சுகிர்தராஜன் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார்.
மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சிக்கப்பட்டபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக் காட்டின. இதனால் அரசுக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரும், அழுத்தங்களும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House