
posted 25th May 2022
யாழ்.மாவட்டத்திற்கு கடந்த 2 வாரங்களாக மண்ணெண்ணை விநியோகம் கிடைக்கவில்லை என கூறியுள்ள யாழ். மாவட்டச் செயலர் க. மகேசன் மண்ணெண்ணைக்கான கோரிக்கை அமைச்சிடம் முன் வைக்கப்பட்டுள்ளதுடன், எமது மாவட்டத்திற்கான மண்ணெண்ணை விநியோகம் இல்லாமையால் கடற்றொழிலாளர்களும், விவசாயிகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கும் விடையத்தை தாம் அமைச்சு மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுட்டிக் காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இன்று புதன்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்;
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உதவிப் பணம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, யாழ்.மாவட்டத்தில் 78 ஆயிரத்து 442 சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கும், 27978 வறுமைப்பட்ட குடும்பங்களுமாக சேர்த்து 1 லட்சத்து 6420 குடும்பங்களுக்கு இந்த உதவிப் பணம் வழங்கப்படும். அதற்கான பணிகளை சமுர்த்தி திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் எமது மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களும் இந்த உதவி வழங்கும் திட்டத்தில் உள்வாங்கப்படுவார்கள் என்றார்.
இந்த விடயத்தை அமைச்சுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் தொியப்படுத்தியுள்ளோம். இதனடிப்படையில், இந்த வாரம் ஒரு தொகுதி மண்ணெண்ணை வழங்கப்படும் என எமக்கு கூறப்பட்டிருக்கின்றது.
அது கிடைக்கப் பெற்றதன் பின்னர் விவசாயிகள், கடற்றொழிலாளர்களுக்கு பங்கீட்டு அட்டை முறையில் மீனவர் சங்கங்களின் சிபார்சுடன் பகிர்ந்தளிக்கப்படும் எனவும், எரிவாயு விநியோகம் பங்கீட்டு அட்டைக்கு பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளரின் கண்காணிப்பின் அந்த அந்த பகுதி முகவர்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக எரிவாயு விநியோகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தன. இந்நிலையில் விநியோக நடவடிக்கைகளை குழப்பம் இன்றி மேற்கொள்வதற்காக நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இவ்வாறு சிலிண்டர் விநியோக நடவடிக்கையில் பல நடைமுறை சிக்கல்கள் உண்டு. அவை தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம். கலந்துரையாடல்களின் முடிவில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, எரிவாயு சிலிண்டர் விநியோகம் குழப்பம் இன்றி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனை குழப்பம் இன்றி முன்னெடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
சிலர் கறுப்பு சந்தைகளில் அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளன என்றார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான 18 நாட்களில் 46 இலட்சத்து 10 ஆயிரத்து 400 லீற்றர் 92 ஒக்ரென் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.
இதேகாலப் பகுதியில், டீசல் 8 இலட்சத்து 81 ஆயிரத்து 100 லீற்றரும் மண்ணெண்ணெய் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 800 லீற்றரும், சுப்பர் டீசல் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 400 லீற்றரும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
சுப்பர் பெற்றோல் விநியோகிக்கப்படவில்லை. இதேபோன்று கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் மண்ணெண்ணெய் விநியோகமும் இடம்பெறவில்லை.
இதேசமயம், கடந்த 14ஆம் திகதி மட்டும் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 200 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது. இதேபோன்று, 20ஆம் திகதியும் ஒரு இலட்சத்து 65 லீற்றர் பெற்றோல் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY