
posted 27th May 2022
இயற்கைக்கான நோபல் பரிசு என அழைக்கப்படும் 'லீனியர்' விருது இலங்கையின் ஆய்வாளரும் இயற்கை ஆர்வலருமான கலாநிதி ரொஹான் பெத்தியகொடவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள புகழ்பெற்ற தாவரவியலாளர்கள் மற்றும் விலங்கியல் நிபுணர்களுக்கு 1888ஆம் ஆண்டு தொடக்கம் வருடாந்தம் லண்டன் லீனியர் சொசைட்டியால் வழங்கப்பட்டு வரும் இந்தப் பதக்கத்தை இலங்கையைச் சேர்ந்த ஒருவர் வெல்வது இதுவே முதல் தடவையாகும். இந்தப் பதக்கத்தை வென்ற இரண்டாவது ஆசியர் என்ற பெருமையையும் கலாநிதி ரொஹான் பெத்தியகொட பெற்றுள்ளார்.
இலங்கையின் நன்னீர் மீன் வளங்கள் குறித்து சிறப்பு ஆய்வை நடத்திய பெத்தியகொட, உலக வங்கி உட்பட பல நிறுவனங்களின் சார்பில் பல்லுயிர் பெருக்கம் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இலங்கையின் பல்லுயிர் ஆராய்ச்சி மற்றும் அதன் முடிவுகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக விருதுக் குழு தெரிவித்துள்ளது.
லண்டனின் லீனியர் சொசைட்டி, இயற்கை வரலாற்றை ஆராய்ந்து, உலகின் பழமையான செயலில் உள்ள சமூகங்களில் ஒன்றாகும். மேலும் ஸ்வீடிஷ் இயற்கை ஆர்வலர் கார்ல் லின்னேயஸ் (1707-1778) நினைவாக லீனியன் சொசைட்டி என்று பெயரிடப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY