நெல்லைக் காக்க விலகியவரைக் காலன் கவர்ந்தான்

வீதியில் நெல் காயவிடப்பட்டிருந்த நிலையில் விலகிவந்த மோட்டார் சைக்கிளை கப் ரக வாகனம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று (07) செவ்வாய் மாலை 4.30 மணியளவில் பரந்தன் - பூநகரி வீதியில் ஓவசியர் கடை சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றது. இதில், க. றேகன் (வயது 35) என்பவரே உயிரிழந்தார்.

வீதியில் நெல் உலரவிடப்படுவதாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.

விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அளித்தும் நீண்டநேரமாக பொலிஸார் அப்பகுதிக்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

நெல்லைக் காக்க விலகியவரைக் காலன் கவர்ந்தான்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 10.12.2025

Varisu - வாரிசு - 10.12.2025

Read More
Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Read More
எட்டாத அன்பு

எட்டாத அன்பு

Read More