
posted 12th January 2023
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை (11) காலை அப்பகுதியில் நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நீரில் மூழ்கிய நிலையில் முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஆலயத்துக்கு வந்த முதியவர் நீரேரியில் நீராட முற்பட்ட சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)