"நீதிக்கான அணுகல்"

ஊடக வெளியீடு – 29.03.2022

விடயம் - "நீதிக்கான அணுகல்" நடமாடும் சேவை தொடர்பான உயர்மட்ட விசேட கலந்துரையாடல்

எஸ் தில்லைநாதன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற "நீதிக்கான அணுகல்" நடமாடும் சேவையின் ஊடாக பெறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான தொடர் நடவடிக்கைகளை ஆராயும் உயர்மட்ட விசேட கலந்துரையாடல் வெளியுறவுத்துறை அமைச்சில் கடந்த 21.03.2022 அன்று இடம்பெற்றது.

வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ பேராசிரியர் G. L. பீரிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரி அவர்கள், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற "நீதிக்கான அணுகல்" நடமாடும் சேவையில் கிடைக்கப்பெற்ற யாழ் மாவட்ட மக்களின் காணி, வனவள, வனஜீவராசிகள், கடற்றொழில், கரையோர பாதுகாப்பு, கடல் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை மக்களுக்கு உடனடியாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என கௌரவ அங்கஜன் இராமநாதன் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இவ் உயர்மட்ட கலந்துரையாடல் வெளியுறவுதுறை அமைச்சில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:-

1. வடமராட்சி கிழக்கு, வடமராட்சி மேற்கு, ஊர்காவற்றுறை- பருத்தித்தீவு, சுண்டிக்குளம் மற்றும் நெடுந்தீவு வனவிலங்குகள் சரணாலயங்களின் ஆளுகை எல்லையை வரையறை செய்தல்.
- இப்பகுதிகளின் எல்லைகளை மீள வரையறை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கான கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டு, ஏப்ரல் மாத இறுதிக்குள் எல்லை நிர்ணய வரைபுகளை தயார் செய்தல் வேண்டும்.

2. கடலோர பாதுகாப்புக்கான காணி கையகப்படுத்தலில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
- துறைசார் அமைச்சர் அவர்களை யாழ் மாவட்டத்துக்கு அழைத்து விடயங்களை நேரில் சென்று ஆராய்வதோடு, 2023 ஆம் ஆண்டுக்குள் கடலோரப் பாதுகாப்புச் சட்டமானது, கடல் ஆழமற்ற களப்பு பகுதிகளை பாதுகாக்கும் விதிமுறைகளுக்கு இடமளிக்கும் வகையில் திருத்தப்படும்.

3. அழிவடைந்த / தவறவிடப்பட்ட காணி ஆவணங்களுக்கான மாற்று ஏற்பாடுகளை ஆராய்தல்.
- காணி அமைச்சின் நடமாடும் சேவை முகாமொன்றை யாழ் மாவட்டத்தில் நடாத்தி தீர்வை பெற்றுக்கொடுத்தல்.

4. சிறப்பு நில மானிய அடிப்படையில் 1979 இல் நல்லூர் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான ஆவணங்களை வழங்குதல்.
- காணி அமைச்சின் நடமாடும் சேவை முகாமொன்றை யாழ் மாவட்டத்தில் நடாத்தி தீர்வை பெற்றுக்கொடுத்தல்.

5. தமிழ்நாடு ஆலயங்களுக்கு சொந்தமாக யாழ் மாவட்டத்தில் உள்ள காணிகளை நிர்வகிப்பதும் மக்களுக்கு கையளிப்பதும்.
- இந்திய அரசுடன் இவ்விடயம் தொடர்பில் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும்.

6. பலாலி விமான நிலைய பகுதிக்காணி உரித்தாளர்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்குதல்
- இவ்விடயம் தொடர்பான விசேட பொறிமுறையொன்றை தயார்செய்து அதனூடாக தீர்வை பெற்றுக்கொடுப்பதோடு, முதற்கட்ட இழப்பீட்டு தொகை விரைவில் வழங்கப்படவுள்ளது.

7. மயிலிட்டி துறைமுக மீன்பிடி சார் பிரச்சனைகள்
- கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் இவ்விடயம் தொடர்பில் ஆராய உயர்மட்ட சந்திப்பொன்று விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

8. காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமிடையில் படகுசேவை ஆரம்பித்து சுற்றுலாதுறையை மேம்படுத்தல்.
- சுற்றுலாத்துறை அமைச்சுடன் இணைந்து பொறிமுறையொன்றை உருவாக்கி வடமாகாணம் முழுவதுக்குமான சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

9. கிளிநொச்சியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பது
- பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து விசேட பொறிமுறையொன்றை தயார்செய்து சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மக்களால் முன்வைக்கப்படும் அனைத்து விடயங்களுக்கும் உடனடித் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர். மேலதிக மீளாய்வு நிகழ்வொன்று உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, மீன்பிடி அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் கப்பல் அமைச்சு, சுற்றுச்சூழல் அமைச்சு, காணி அமைச்சு, வனஜீவராசிகள் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் வெளியுறவுதுறை அமைச்சின் அழைப்பில் பங்கேற்றிருந்தனர்.



இதன் அசல் பிரதியை வாசிக்க, கிளிக் செய்யவும் >>>> “நீதிக்கான அணுகல்"

"நீதிக்கான அணுகல்"

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House