
posted 7th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
நிலவிலே நினைவேந்தல்
மறைந்த கவிஞர் மர்ஹும் ஆசுகவி அன்புடீன் நினைவாக நிலவிலே நினைவேந்தல் மற்றும் துஆ பிரார்த்தனை நிகழ்வு ஆசுகவி பொன்விழா மன்றத்தின் ஏற்பாட்டில் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் தலைமையில் அட்டாளைச்சேனை பீச் ஹவுஸ் தனியார் விடுதியில் நடைபெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் ஆசுகவியின் பல பக்கங்களை மீட்டி சிறப்புரையாற்றியதுடன், வரவேற்புரையினை ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர், துஆப் பிரார்த்தனையினை மெளலவி என்.ரீ. நசீர், ஏற்புரையினை அவரது புதல்வி கவிஞர் கே.எல். நப்லாவினாலும், நன்றி உரையினை சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எப். நவாஸினால் நிகழ்த்தப்பட்டது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, முன்னாள் தூதுவர் காரியாலய அதிகாரி எம்.ஏ. சிறாஸ் அகமட், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.ஏல். தௌபீக் இலக்கியவாதிகளாக கவிஞர் ஈழமதி ஜப்பார், கவிஞர் பாலமுனை பாவேந்தல் பாறுக், கவிஞர் ஒலுவில் கவிஞர்களான ஜமால்தீன் மற்றும் ஆசிரியர் ஜே. வஹாப்தீன், விரிவுரையாளரும் கவிருமான றசாக் ஆகியோர்களால் ஆசுகவி பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.
இந் நிகழ்வில் கல்விமான்கள், மார்க்க உலமாக்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)