நான்கு பிள்ளைகளின் தகப்பனின் உடலை கொண்டுவர உதவுங்கள் - மனைவி

கனடாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உயிரிழந்த சாவகச்சேரியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலை இலங்கைக்கு எடுத்துவர உதவுமாறு அவரின் மனைவி உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நேற்று (24) வியாழக்கிழமை தகவல் வெளியாகியிருந்தது.

இந்த சம்பவத்தில், சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த கிரிதரனின் மனைவி கருத்து தெரிவிக்கும்போது, அங்கிருந்து கணவரின் உடலை இங்கே கொண்டுவர 30 இலட்சம் ரூபாய் வரையில் தேவைப்படும் என தெரிவித்து என்னிடம் கையொப்பம் கேட்டனர்.

அந்த 30 இலட்சம் ரூபாய் இருக்குமாயின் நான் ஏன் என்னுடைய கணவரை கடல் கடந்து அனுப்ப வேண்டும். நான்கு பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும், கடன் பிரச்சனைகளும் இருக்கின்றன. அவற்றிலிருந்து மீள வேண்டும் எனத் தெரிவித்தே கடல் கடந்து என்னுடைய கணவர் சென்றார். இப்படி நடக்குமென நான் எதிர்பார்க்கவில்லை.

கடைசியாக நான் அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை. அப்பா இல்லை என்பதை எனது குழந்தைகளுக்கு காட்டுவதற்காக அவரின் உடலை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என கதறியழுத வண்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், படகு பிடிப்பட்ட பின்னர் தான் அடுத்த நாள் தொலைபேசியில் அழைத்து கூறினார், எந்தவொரு பிரச்னையும் இல்லை, யோசிக்க வேண்டாம், நான் அழைப்பை ஏற்படுத்திய தொலைபேசி எண்ணுக்கு திருப்பி அழைக்க வேண்டாம் என்று. இதைத்தான் கடைசியாகக் கூறினார். அதன் பின்னர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. கடைசியாக அவர் இறந்து விட்டார் என்ற செய்தியைத்தான் நான் அறிந்தேன் என்றும் கூறினார்.

மேலும், பொருளாதார சூழல் காரணமாகவே தனது கணவன் புலம்பெயர்ந்து சென்றதாகவும், இங்கு ஏற்கனவே செய்து வந்த தொழிலையும் விற்பனை செய்து, அதன் மூலம் பெற்ற பணத்திலேயே கனடா சென்றார் எனக் கூறும் மனைவி, கணவனின் உடலை எடுத்துவர தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் தமிழர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

உதவுங்கள் - கனடா செல்லும் முயற்சியில் குடும்பஸ்தர் மரணம் <<<<கிளிக் செய்து முன்னைய செய்தியை வாசியுங்கள்

நான்கு பிள்ளைகளின் தகப்பனின் உடலை கொண்டுவர உதவுங்கள் - மனைவி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More