
posted 22nd November 2022
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கிலங்கையின் நாட்டாரியல் இலக்கியத்திற்குப் புத்தூக்கமளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
கிழக்கின் பாரம்பரிய நாட்டாரியல் இலக்கிய வரலாறுகள், வெளிப்பாடுகள் மறைந்துபோகாது பேணிப்பாதுகாக்கும் வண்ணம் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சமாக கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் முதல் தடவையாக நாட்டார் கலை வித்தகர் விருது வழங்கப்பட்டு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2021 – 2022 தமிழ் இலக்கிய விழா, திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரண்யா சுதர்சனின் நெறிப்படுத்தலில், திருகோணமலை, உவர்மலை, விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
இந்த மாகாண தமிழ் இலக்கிய விழாவில் முதல் தடவையாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த நாட்டாரியல் இலக்கிய கர்த்தாவான எம்.ஐ. முஹம்மது ஜெலீல், நாட்டார்கலை வித்தகர் விருதினைப் பெற்றுக்கொண்டார்.
“எழுகவிஜெலீல்” எனும் புனைப்பெயருடன் நட்டாரியலை இன்னும் உயிர்ப்புடன் செழிப்புறவைத்துக்கொண்டிருக்கும் அவருக்கு முதன் முறையாக கிழக்கில் அறிவிக்கப்பட்ட மேற்படி வித்தகர் விருது, மாகாண ஆளுநர் அனுராதாயஹம்பத்தின் பிரசன்னத்தில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டாரியலுக்கான கிழக்கு மாகாண வித்தகர் விருதினைப் பெற்றுக் கொண்ட எழுகவி ஜெலீலுக்கு இலக்கியகர்த்தாக்கள் மற்றும் கலை, இலக்கிய அமைப்பினர் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY