நாடளாவிய ஊரடங்கு

முன்னாள் பிரதமர் மஹிந்தராஜ பக்ஷவின் ஆதரவாளர்களெனப்படும் குண்டர்களால் தொடுக்கப்பட்டதாக்குதலையடுத்து நாட்டில் எழுந்துள்ள பெரும் கொந்தளிப்பு நிலைகாரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு நாளை புதன் கிழமை காலை தளர்த்தப்படவுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை முழுமையாக ஊரடங்குச்சட்டம் அமுலிலிருந்ததால் கிழக்கிலும் பல முக்கிய நகரங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டன.

எனினும் சில பிரதேசங்களில் மக்களின் நடமாட்டங்கள் சாதாரண காலங்கள் போல் காணப்பட்டபோதிலும் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஊரடங்கு தொடர்பிலான கெடுபிடிகளை முன்னெடுக்கவில்லை.

முக்கிய வர்த்தக நகரங்களான, கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, நிந்தவூர் போன்ற பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் பொது மக்கள் கூடும் பொதுச் சந்தைகளும் மூடியே காணப்பட்டன.

இதேவேளை கல்முனை சாய்ந்தமருது, மாளிகை;காடு பிரதேசங்களில் மண்ணெண்ணை, பெற்றோள் விநியோகம் இடம் பெற்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெருமளவானோர் திரண்டிருந்தமையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை கிழக்கில் தனியார் மற்றும் போக்குவரத்து பஸ் சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை கல்முனை பஸ் நிலையம் உட்பட தனியார் பஸ் நிலையமும் வெறிச்சோடியே காணப்பட்டன.

ஊரடங்கு நிலமை நாளையுடன் சீரடையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடளாவிய ஊரடங்கு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More