நாடகங்கள் வெறும் கூத்து அல்ல - நாட்டை ஆளும் தலைவர்களையும் உருவாக்கவல்லது - மித்திரன்

நாடகங்களும் இலக்கியங்களும் ஒவ்வொருவரது வாழ்வுடன் பின்னிப்பிணைந்து ஒரு மனித வாழ்வுடன் தொடரும்வரும் ஒரு பகுதியாக காணப்படுவதுடன் நாட்டை ஆளும் தலைவர்களையும் உருவாக்கவல்லது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் மித்திரன் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம்’ குபேரகா கலாமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பிரதிநிதியான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

நாடகங்களள் உள்ளிட்ட கலைகளை கட்டிக் காத்து வரும் கலைஞர்கள் மற்றவர்களின் இரசனைகளுக்கு தீனி கொடுக்கும் ஒரு பாத்திரமாக மட்டும் இருந்து விடவில்லை. அந்த கலைத்துறையானது நாட்டை ஆளும் வல்லமை கொண்ட தலைவர்களையும் உருவாக்கி காட்டியுள்ளது.
எனவே, எமது நாட்டிலும் நாம் எமது கலை இலக்கியங்களை எமது பாரம்பரியங்களையும் கலாசார பண்புகளையும் அருகவிடாது பாதுகாப்பது அவசியமாகும்.

இதேநேரம் கலைஞர்கள் பலர் மிகவும் ஏழைகளாகவே இருக்ககும் நிலை எமது நாட்டில் காணப்படுகின்றனர். அதனால் அவர்கள் தமது கலைகளை மேடையேற்றுவதிலும், நவீன வழிகளில் திரைக்கு முன்னால் கொண்டு செல்வதற்கும் முடியாது பல அசௌகரியங்களை நாளாந்தம் சந்தித்துவருகின்றனர்.

இதேவேளை எமது நாட்டில் குறிப்பாக தமிழ் கலைஞர்கள் பலரது முன்னேற்றங்களுக்கு பல்வேறு தடைகளும், இடையூறுகளும் பொருளாதார ரீதியில் காணப்படுகின்றது.

அத்துடன் நவீனத்துவம் என கூறி பல புதிய தொலைக்காட்சி நாடகங்கள், தொலைக் காட்சிகளில் வலம்வந்து கொண்டிருப்பதானால் உள்ளூர் கலைஞர்களது கற்பனைகளும் அவர்களது நெறியாள்கயைில் உருவாகும் நாடகங்கள் போன்றவற்றிற்கு சரியான அங்கீகாரமும் மக்களிடையே கிடைக்காது போகின்றது.

இதனால் அந்த கலைஞர்கள் தமது ஆற்றல்களை கைவிட்டு ஏனைய துறைகளில் செல்லும் துரதிஸ்டவசமான நிலையும் காணப்படுகின்றது.
இதேவேளை எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் குறித்த தமிழ் கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய கலைஞர்கள் மேம்பாடடைய வேண்டும் என்றும், பல கலைஞர்களது மேம்பாட்டுக்கு பல தேவைப்பாடுகளை முடியுமான வரையில் செய்துள்ளார்.

குறிப்பாக கடந்த கொரோனா காலப்பகுதியில் கூட கலைஞர்கள் எதுவித பொருளாதார ஈட்டல்களும் இல்லாதிருந்த வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலைஞர்களின் பொருளாதார தேவைகளுக்காக அரசுடன் கலந்துரையாடி நிவாரணங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.

இதேவேளை நாடகங்கள் வெறும் கூத்து அல்ல. அவை ஒவ்வொரு இனத்தினதும், மரபுகளும் வரலாறுகளுமாகவே இருக்கின்றது. இந்திய தேசத்தின் தமிழகத்தை கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட கலைஞர்களே தலைமைத்துவம் செய்து, சிறந்த ஆட்சியாளர்களாக இருந்து, இத்தனை வளமிக்க தேசமாக அதை உருவாக்கி காட்டியுள்ளார்கள்.

அந்தவகையில் நாமும் எமது உள்ளூர் கலைஞர்களை சர்வதேச அரங்கில் நிமிர்ந்து நிற்பவர்களாக தரமுயர்த்த அனைத்து செயற்பாடுகளையும், முன்னெடுத்து அதில் வெற்றி காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கட்சியின் வலி தெற்கு பிரதேச நிர்வாக பொறுப்பாளர் வலன்ரயன் சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடகங்கள் வெறும் கூத்து அல்ல - நாட்டை ஆளும் தலைவர்களையும் உருவாக்கவல்லது - மித்திரன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More