
posted 20th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா
வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா நேற்று (19) திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
காலை விசேட பூசைகளை தொடர்ந்து வசந்த மண்டப பூசை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா ஒலி விண்ணைப் பிளக்க கொடியேற்றத் திருவிழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நாகபூசணி அம்மன், பிள்ளையார், முருகப் பெருமான் சகிதம் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் நேற்றைய திருவிழாவில் பங்கேற்றனர். ஆலயத்துக்கு செல்வதற்காக விசேட போக்குவரத்து மற்றும் படகு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்ததுடன், ஆலய சூழலில் குடிதண்ணீர் மற்றும் அன்னதான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)