நடுத்தர முதலீட்டாளர்களுக்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடல்

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில், சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்னைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் நேற்று யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் நடைபெற்றது.

வட பிராந்தியத்துடன் தொடர்புடைய பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்குதல், சிக்கல்களை கையாள்வதற்கான சாத்தியமான தீர்வுகள் மற்றும் உத்திகள் வழங்குவதை நோக்காக கொண்டு, இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்கள், வங்கிகளின் பிராந்திய பொது முகாமையாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, முதலீட்டாளர்களின் பிரச்னைகளை நேரடியாக கேட்டறிந்து கொண்ட மத்திய வங்கி ஆளுநர், வட மாகாண ஆளுநர், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் பேசி, அதற்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்

நடுத்தர முதலீட்டாளர்களுக்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடல்
நடுத்தர முதலீட்டாளர்களுக்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடல்

எஸ் தில்லைநாதன்

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 08.09.2025

Varisu - வாரிசு - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 06.09.2025

Varisu - வாரிசு - 06.09.2025

Read More
Mahanadhi - மகாநதி - 05.09.2025

Mahanadhi - மகாநதி - 05.09.2025

Read More