
posted 29th March 2022
நங்கூரங்கள் திருட்டில் கடற்படைச் சிப்பாய் கைது
மாதகல் கடற்கரையில் மீனவர்களின் படகுகளிலிருந்த நங்கூரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் மாதகல் – லுார்து மாதா கோவிலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் தரித்து விடப்பட்ட மீனவர்களின் படகுகளில் இருந்த நங்கூரங்கள் களவாடப்பட்டு, பட்டா ரக வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.
இது தொடர்பாக இளவாலை பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் நங்கூரம் ஏற்றிய வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டது.
இதன்போது கைதான சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடற்படைச் சிப்பாய் ஒருவரே நங்கூரங்களை திருட உதவியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
அதனை அடுத்து முன்னெடுக்கப்பட்டு வந்த மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் கடற்படைச் சிப்பாய் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கூட்டமைப்புடன் பேச்சுக்கான காரணம் என்ன?
அரசாங்கத்திற்க்கு அரசியல், பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நிர்ப்பந்தமே கூட்டமைப்புடன் பேச்சுக்கு காரணம்.....! அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.
அரசாங்கத்திற்க்கு அரசியல், பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நிர்ப்பந்தமே கூட்டமைப்புடன் பேச்சுக்கு காரணம் என அரசியல் ஆய்வாளரும். சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சட்டதடதரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவருடன் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் முகை்கியஸ்தர் மருத்துவர் க. பவணந்தி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது;
கடந்த 25ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அரசாங்கம் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்ட நிர்ப்பந்தம் காரணமாகவே பேச்சவார்த்தைக்கு வந்தது. எனவே பேச்சுவார்த்தையைக் கவனமாக கையாளுமாறு கேட்டிருந்தோம். தேசமாக அணுகுதல், சொந்த நிகழ்ச்சி நிரலின்படி, செயற்படுதல், அரசின் மனவிருப்பை உத்தரவாதப்படுத்துதல், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை பெற்றுக்கொள்ளுதல் என்பன அணுகுமுறையில் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம். தமிழ்த் தரப்பின் செயற்பாடுகள் அரசைப் பாதுகாப்பதாக இருக்கக் கூடாது எனவும் கூறியிருந்தோம்.
இந்த அணுகுமுறைகள் எதுவும் பேச்சுவார்த்தைச் செயற்பாட்டில் பின்பற்றப்படவில்லை. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் முறையான கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை. பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் பேச்சவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. துறைசார் நிபுணர்களின் கருத்துக்கள், மக்கள் அமைப்பின் கருத்துக்கள் எவையும் பெறப்படவில்லை. முதலாம் நாள் பேச்சுவார்த்தையை நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கும் நல்லெண்ணத்திற்கான மன விருப்பத்தின் உத்தரவாதத்தை பெறுவதற்கும் பயன்படுத்தும்படியும் கூறியிருந்தோம். அவை எதுவும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
சம்பந்தன் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படிகேட்டிருக்கின்றார். தற்போது யாப்பில் உள்ள 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. பேச்சுவார்த்தைக்கு முதல் நாள் ஜனாதிபதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்பு கொண்டபோது கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை பற்றியும் கூறியிருதார்.
அதற்கு ரணில் நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியல் யாப்பு முயற்சி இடம்பெற்றபோது ஏழு மாகாணங்ளின் முதலமைச்சர்கள் ஆளுனர்களின் அதிகாரங்களை நீக்கி மாகாண சபையிடம் அவற்றை வழங்குங்கள் எனக் கேட்டிருந்தனர். எனவே ஆளுநரின் அதிகாரத்தை நீக்கி மகாணசபையை பலப்படுத்தும்படி ஜனாதிபதிக்கு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியிருந்தார்,
இந்தத் தகவலை அவர் உடனடியாக சுமந்திரனுக்கும் தெரியப்படுத்தி ஆளுநரின் அதிகாரத்தை நீக்கி மாகாண சபையை பலப்படுத்துவது பற்றி பேசுங்கள் எனவும் கூறியிருந்தார். ஆனால் இந்த விடயம் பற்றி சம்பந்தன் வாயே திறக்கவில்லை.
ஆளுநரின் அதிகாரத்தை நீக்கினாலும் 13வது திருத்தம் தமிழ் மக்களுக்கு உதவப்போவதில்லை. சட்டவாக்க அதிகாரம வடக்கு கிழக்க இணைப்பு, ஒருங்கிணைந்த பட்டியலை நீக்குதல் போன்ற பிரச்சினைகளும் அங்கு உள்ளன. இவற்றை மேற்கொள்ளாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் எந்தப்பயனும் கிடைக்காது. 13வது திருத்தம் பற்றி தமிழத் தரப்பு பேசும்போது அதனையே அரசியல் தீர்வாக தமிழ் மக்களது தலையில் கட்டிவிடும் அபாயமும் உண்டு.
அமெரிக்க- இந்திய – மேற்குலகின் நிகழ்ச்சி நிரலும் இதுதான். 13வது திருத்தம் யாப்பில் உள்ளது. எனவே நல்லெண்ணத்தைக் காட்டுவதற்கு 13வது திருத்தத்தை திருத்தங்களுடன் அமூல்படுத்துங்கள் எனக் கேட்பதே பொருத்தமானதாக இருக்கும்.
தமிழ் மக்கள் சந்திக்கின்ற அரசியல் கைதிகள் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, காணிப்பறிப்பு பிரச்சினை பற்றியும் உத்தரவாதம் வழங்கப்பட்டிருப்பதாக சுமந்திரன் கூறுகின்றார். அரசியல் கைதிகள் பிரச்சினையை இழுத்தடிப்பதற்கு எந்தக் காரணமும் தேவையற்றது. அரசியல் தீர்மானம் ஒன்றின் மூலம் உடனடியாக அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டமைப்பினர் அழுத்தமாக முன்வைத்திருக்க வேண்டும். போர் முடிந்தவுடன் நல்லிணக்கத்திற்கு செல்வதற்கு முதல் ஆற்றுகின்ற பணி அரசியல் கைதிகளை விடுவிப்பதுதான். ஆனால் 10 வருடங்களாகியும் இந்தச் செயற்பாடு இடம்பெறவில்லை. மரணதண்டனைக் கைதியான துமிந்த சில்வாவை விடுதலை செய்த ஜனாதிபதிக்கு இது பெரிய காரியமல்ல. மன விருப்பத்ததான் இங்கு முக்கியமானது. துமிந்த சல்வா தொடர்பான மன விருப்பு தமிழ் மக்கள் தொடர்பாக வரவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் தெளிவான உரையாடல் இடம்பெறவில்லை. மேலோட்டமான உரையாடலே இடம்பெற்றது. இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் சிபார்சு செய்த நிலைமாறுகால நீதி நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்க வேண்டும். இது போதுமானளவு இடம்பெறவில்லை.
இது பற்றிய விசாரணை சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் இடம்பெற வேண்டுமே தவிர உள்ளுர் பொறிமுறையில் மட்டும் இடம் பெறக் கூடாது. காணிப்பறிப்புத் தொடர்பாக கண்காணிப்புடன் கூடிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். அது பற்றியும் பேசப்படவில்லை. புலம் பெயர்ந்தவர்களின் முதலீடு அரசியல் தீர்வு இல்லாமல் முன்னெடுக்க முடியாது.
எனவே காணிப்பறிப்பு அதிகாரங்களைக் கையாள்வதற்கும், புலம்பெயர்ந்தோர் முதலீட்டைக் கொண்டுவருவதற்கும் அரசியல் தீர்வு வரும்வரை இடைக்கால நிர்வாகம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். எனவே இடைக்கால நிர்வாகம் ஒன்றை உருவாக்குவதற்கு அனைத்து அரசியல் சக்திகளையும் அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகின்றோம் என்றார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்
இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு ஈழத் தமிழ்த் தேசம் உறுதியாக செயல்பட்டு வரும் நிலையில், ஈழத் தமிழ்த் தேச மக்களின் நலன்களை பேணும் வகையில் இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களை பிரயோகித்து, ஒற்றையாட்சி அரசியல் யாப்பை கொண்டு வருவதைத் தடுத்து - தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியல் யாப்பைப் பெறுவதற்கு இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.
- இவ்வாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகம் ஊடாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு,
தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கான நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாக 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13ஆம் திருத்தமானது, நடைமுறைக்கு வந்தநாளிலிருந்து அது தமிழ் மக்களது இனப்பிரச்னைக்கு தீர்வு அல்ல என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் ஆரம்பத்திலிருந்தே அதனை நிராகரித்து வந்துள்ளனர். பாராளுமன்றத்தில் 13ஆம் திருத்தச் சட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோது, தமிழர் அரசியல் அரங்கில் இயங்கிக் கொண்டிருந்த தரப்புக்கள், அந்த வரைவை பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்று கோரி இந்திய பிரதமருக்கு எழுத்து மூலமாக தெரிவித்திருந்ததும் வரலாற்று நிகழ்வாகும்.
13ஆம் திருத்தமானது சட்ட மூலமாக நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரப்பட்டதன் நோக்கமே, 13ஆம் திருத்தமானது, தமிழ் மக்களின் தீர்வு என்னும் விடயத்தில் ஆரம்பப்புள்ளியாகக்கூட கருதப்பட முடியாது என்பதனாலேயே. எனினும், தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், குறித்த 13ஆம் திருத்தச் சட்டமும் மாகாண சபைகள் சட்டமூலமும் நிறைவேற்றப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றபோது, தமிழர் அரசியல் அரங்கில் இயங்கிக் கொண்டிருந்த ஓர் அமைப்பு மட்டும் 1988இல் அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வட, கிழக்கு மாகாண சபையிலிருந்த நிர்வாகத்தைக் கைப்பற்றியிருந்தது.
இருந்த போதிலும் இதனூடாக எதனையுமே சாதிக்க முடியாது என்ற உண்மையை அனுபவ ரீதியாக உணர்ந்தபோது, மாகாண சபையை பொறுப்பேற்றிருந்த அந்தத் தரப்புக்கூட, தாம் வகித்துவந்த மாகாண சபை அங்கத்துவத்தை இராஜிநாமா செய்து 13ஆம் திருத்தத்தை முற்று முழுதாக நிராகரித்திருந்தனர். இந்த நடவடிக்கையானது, தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில், 13ஐ முன்னிறுத்தி நகர முடியாது என்பதை நிரூபிப்பதாகவும், 13 ஆம் திருத்தமானது தமிழர்களின் இனப்பிரச்னைக்கான தீர்வு விடயத்தில் ஆரம்பப்புள்ளியாகக்கூட கருதமுடியாது என்ற யாதார்த்தத்தை மீண்டும் நிலைநாட்டுவதாகவும் அமைந்துள்ளது.
34 வருடங்களுக்கு மேலாக இந்த 13ஆம் திருத்தமும் மகாகாண சபைகளும், இலங்கை அரசியலமைப்பில் இருந்தும்கூட, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் ஒற்றையாட்சியை முற்று முழுதாக நிராகரித்தே தமது ஏகோபித்த ஆணையை வழங்கிவருகின்றனர். தமிழ்த் தேசம் அங்ககீகரிக்கப்படுகின்ற - தமிழ்த் தேசம் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய - இணைந்த வடக்கு, கிழக்கு தாயகம் பாதுகாக்கப்படுகின்ற சமஷ்டித் தீர்வையே கோரி வருகின்றார்கள்.
13ஆம் திருத்தமும் மகாண சபைகளும் கடந்த 34 வருடங்களாக நடைமுறையில் இருக்கக்கூடியதாகவே, தமிழ் மக்களின் ஆணைகளைப் பெற்றவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் 13ஆம் திருத்தம் ஒரு பேசு பொருளாகக்கூட பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. அந்தவகையில், கணக்கிலெடுக்கப்படாத - நிராகரிக்கப்பட்ட ஒரு விடயமாகவே தமிழ்த் தேசிய அரங்கில் 13ஆம் திருத்தம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்தும் அவ்வாறே இருக்கிறது.
இந்நிலையிலேயே, கடந்த ஜனவரி 30ஆம் திகதி யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவிலும், மார்ச் 13ஆம் திகதி வவுனியா - தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு திடலிலும், மக்கள் எழுச்சிப் பேரணிகள் நடைபெற்றிருந்தன. அதில், தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு, 13ஆம் திருத்தம் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியுமல்ல, இறுதித் தீர்வுமல்ல என்பதனை ஆணித்தரமாக வெளிப்படுத்தினர். அத்துடன், ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் வேலைத் திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இதேவேளை - தமிழ்த் தேசம் அங்ககீகரிக்கப்படுகின்ற - இணைந்த வடக்கு, கிழக்கு தாயகத்தில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்ற சமஷ்டித் தீர்வே தேவை. இத்தகைய தீர்வை அடைந்துகொள்ள இந்திய அரசும் எனைய நட்பு நாடுகளும் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள் உரிமைக்காக போராடி வந்த காலப்பகுதியில், அவர்கள் நாட்டைப் பிரிக்காத, சமஷ்டி தீர்வுக்குத் தயாராக இருக்கவில்லை என்றும், தனிநாட்டிற்காக மட்டுமே பிடிவாதமாக செயல்படுகின்றார்கள் என்றும் அப்பட்டமான பொய்யைக் கூறியே, ஓர் இனவழிப்புப் போருக்கு இலங்கை அரசு சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று இனவழிப்பின் மூலமாக உரிமைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்திருந்தார்கள்.
போர் முடிந்த பின்னர், ஒற்றையாட்சியை நிராகரித்து, இலங்கை சட்டத்தின் பிரகாரம் நாட்டைப் பிரிக்காமல் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டித் தீர்வையே வலியுறுத்தி, தமிழ் மக்கள் அனைத்துத் தேர்தல்களிலும் தமது ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். இலங்கைக்கு நான்காவது புதிய அரசியல் யாப்பு ஒன்றினை கொண்டுவருவதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள, அரசாங்கம், அந்த மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து புதிய அரசியல் அமைப்பை சமஷ்டி அரசியல் யாப்பாக கொண்டுவராமல் மாறாக ஒற்றையாட்சியாக கொண்டு வருவதற்கே நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
இந்நிலையில் இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு ஈழதமிழ்த் தேசம் உறுதியாக செயல்பட்டு வரும் நிலையில், ஈழத் தமிழ்த் தேசமக்களின் நலன்களை பேணும் வகையில், இலங்கை அரசுமீது அழுத்தங்களை பிரயோகித்து, ஒற்றையாட்சி அரசியல் யாப்பை கொண்டுவருவதைத் தடுத்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியல் யாப்பை கொண்டுவருவதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் - என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House