
posted 5th March 2022

வந்தாறுமூலையில் வைத்து அண்மையில் சிலரால் ஊடகவியலாளர் தேவப்பிரியன் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைகளைக் கண்டித்தும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு ஊடகவியலாளர் தொழிற்சங்கம் ஆகியன ஒன்றிணைந்து மட்டக்களப்பு காந்திப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.
மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் வா. கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், ஞ. ஸ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், உறுப்பினர் இரா. துரைரத்தினம், மட்டக்களப்பு மாநகர நகரபிதா தியாகராஜா சரவணவன், உறுப்பினரும், ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன், இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணி தலைவர் லோகிதராஜா திவாகரன், தாக்கப்பட்ட ஊடகவியலாளரின் பெற்றோர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கலந்து கொண்டோர் அமைதியான முறையில் காந்திப் பூங்கா வளாகத்தை சுற்றி
“அடிக்காதே அடிக்காதே ஊடகவியலாளரை அடிக்காதே”
“சர்வதேசமே ஊடக தர்மத்தை நிலைநாட்டு”
“பேனா முனையை ஒடுக்காதே”
போன்ற வாசகங்களை உரத்த தொனியில் எழுப்பியவாறு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கருத்துத் தெரிவிக்கையில் இத்தோடு ஊடகவியலாளர் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இனியும் தொடருமாக இருந்தால் நாம் வேறு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். ஊடகவியலாளர் ஊடாகவேதான் உண்மைத் தகவல்களை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். இத்தகைய பேனா முனைப் போராளிகளின் சக்தி வலிமையானது என்றார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House