posted 4th September 2023
Congratulations! Saleem
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தேனாரம் செய்தியாளருக்கு கௌரவம்
கிழக்கிலங்கையைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் தேனாரம் இணைய ஊடக கிழக்கு மாகாண செய்தியாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீமிற்கு மட்டக்களப்பில் கௌரவம் அளிக்கப்பட்டது.
மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தென்றல் சஞ்சிகையின் 60ஆவது இதழ் வெளியீட்டு விழாவும், களைஞர் கௌரவிப்பு நிகழ்வும் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் தேனாரம் கிழக்கு மாகாண செய்தியாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் மிக நீண்டகாலமாக ஊடகத்துறைக்கு ஆற்றிவரும் பெரும் பங்களிப்பிற்காக “வீசு தென்றல் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த விருதினை மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரியும் கிழக்குமாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருமான கலாநிதி மூ. கோபாலரெத்தினம் மூத்த ஊடகர் சலீமிற்கு வழங்கி வைத்தார்.
அத்துடன் தென்றல் சஞ்சிகையின் 60ஆவது இதழ் சிறப்பு மலரின் கௌரவ பிரதியும் அன்னாருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
தென்றல் சஞ்சிகை ஆசிரியர் கதிரேச பிள்ளை கிருபாகரன் தலைமையில் மேற்படி பெருவிழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.