
posted 2nd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தேசிய தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட பெரும் தலைவரை இழந்துவிட்டோம்
நீண்ட காலம் தமிழர்களை வழிநடத்திய ஒரு உன்னதமாக பெரும் தலைவரை தமிழ் தேசிய இனம் இழந்துவிட்டது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று முன் தினம் (30) இரவு காலமானார்.
அவரின் மறைவையொட்டி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மாவட்டப் பணிமனை முன்றலில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட சிறீதரன் எம்.பி;
சம்பந்தன் ஐயாவின் இழப்பு தமிழ் மக்களை பொறுத்தவரை காலத்தின் பெரும் இழப்பாகவே கருதப்படுகின்றது.
அவர் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் ஒன்றாக இணைந்து, பயணித்து முன்னெடுப்பதே அவருக்கு நாங்கள் மரியாதை ஆகும்.
வடக்கு மற்றும் கிழக்கை இணைப்பதில் மூல காரணமாக இருந்து, தேசிய தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மிகப் பெரும் தலைவரை தமிழ்த் தேசியம் இழந்திருக்கின்றது.
இந்நிலையில், அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)