தெய்வங்களுக்கே இந்த நிலைமையென்றால், மனிதருக்கு?

30 வருடங்களாக பூட்டப்பட்ட இந்து ஆலயங்களின் சாபமே நாட்டை பாடு படுத்துகிறது. ஆறு திருமுருகன் தமிழகத் தலைவர் அண்ணாமலை இடம் தெரிவிப்பு.

யாழ் காங்கேசன்துறையில் எவ்வித பூசை வழிபாடுகளும் இன்றி சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பூட்டப்பட்ட இந்து ஆலயங்களின் சாபமே தற்போது நாட்டைப் பாடுபடுத்துவதாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் வந்த இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையை நல்லை ஆதீன குருமுதல்வர் சன்னிதானத்தில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், காங்கேசந்துறை பகுதியில் மக்களின் காணிகளை பறித்து ஆடம்பர ஜனாதிபதி மாளிகை கட்டியுள்ள நிலையில் மக்களை இன்னும் மீள் குடியேற்றம் செய்யவில்லை.

ஆனால், அப்பகுதியில் காணப்படுகின்ற நான்கிற்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் இன்னும் பூசை வழிபாடுகள் இன்றி பூட்டப்பட்ட நிலையில் உள்ளமைதான் இலங்கை நாட்டின் இன்றைய நிலைமைக்கும், அங்கு வியாபித்திருந்த தெய்வங்களை மூடி வைத்த சாபங்களினால் வந்த விளைவுகளுமாகும் .

சடையம்மா மடம், விஷ்ணு கோயில் மற்றும் சிவன் கோயில் உட்பட அப்பகுதியில் பல இந்து ஆலயங்கள் இருக்கின்ற நிலையில் ஆட்சியாளர்கள் அதனை விடுவித்து பூசை வழிபாடுகள் இடம் பெற அனுமதிக்க வேண்டும்.

நாங்கள் எவ்வித அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல. மதத்தலைவர்கள் என்ற ரீதியில் மக்களுடைய பிரச்சினைகளை தெளிவாக எடுத்துரைத்தோம்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்களின் தீர்வு விடையத்தில் அக்கறையாக உள்ள நிலையில், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்குரிய தீர்வும் வந்தடைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரியாரும் உடனிருந்தார்.

தெய்வங்களுக்கே இந்த நிலைமையென்றால், மனிதருக்கு?

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY