
posted 24th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை பொதுமக்கள் பார்க்கும் வாய்ப்பு
மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டும், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் ஒக்டோபர் 24, 25ம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக் கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது
அன்றைய தினம் சகல பீடங்களிலும் கல்விசார் நடவடிக்கைகள் மற்றும் கண்காட்சிகள், பிரதான நூலகம் உட்பட பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தினை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் நிகழ்வானது வரலாற்றில் முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அன்றைய தினம் பொதுமக்களுக்கென சகல பீடங்களிலும் கல்விசார் நடவடிக்கைகள் மற்றும் கண்காட்சிகள் என பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெறும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)