துர்நாற்றக் காரணிகளை அகற்றத் தவறிய அதிகாரிகள் மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

சாய்ந்தமருது பிரதேசத்திலும் கல்முனையின் சில பகுதிகளிலும் அண்மைக்காலமாக வீசும் துர்வாடையைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ரொஷான் அக்தர் இவ்வழகைத் தாக்கல் செய்துள்ளார்.

இம்மனுவில் பிரதிவாதிகளாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கல்முனை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி, மாநகர சபையின் மிருக வைத்திய அதிகாரி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர், கல்முனை மாநகர ஆணையாளர் உட்பட 08 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.

இம்மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் அவர்கள், எதிர்வரும் 06ஆம் திகதியன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானித்ததுடன், அன்றைய தினம் நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டார்.

மனுதாரரான சட்டத்தரணி ரொஷான் அக்தர் சார்பில் சட்டத்தரணிகளான ஆரிப் சம்சுதீன், எம்.எஸ். ரஸ்ஸாக், ரைசுல் ஹாதி, ஜாவித் ஜெமீல், சுஹால் பிர்தௌஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக சாய்ந்தமருது பிரதேசத்திலும் அண்மைய நாட்களாக கல்முனையின் சில பகுதிகளிலும் மிக மோசமான துர்நாற்றம் வீசி வருகின்ற போதிலும் அத்துர்நாற்றம் எங்கிருந்து வருகின்றது என்பதை துல்லியமாகக் கண்டறியவோ, அதனை இல்லாமல் செய்வதற்கோ சந்தேகத்திற்கிடமான இடங்களை முறைப்படி கண்காணிப்பு செய்து, நடவடிக்கை எடுக்கவோ சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தவறியிருக்கிறார்கள் என குறித்த மனுவில் சுட்டிக்காட்டியிருப்பதாக சட்டத்தரணி ரொஷான் அக்தர் தெரிவித்தார்.

இத்தூர்நாற்றத்தினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விவகாரம் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே பொது நலன் கருதி 1979ஆம் ஆண்டு 15ஆம் இழக்க குற்றவியல் நடவடிக்கை கோவையின் பிரிவு 136 (1) (அ) பிரிவின் கீழ் இவ்வழகைத் தாக்கல் செய்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

துர்நாற்றக் காரணிகளை அகற்றத் தவறிய அதிகாரிகள் மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More