
posted 9th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
திறந்து வைக்கப்பட்ட ரெனிஸ் விளையாட்டரங்கு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை மாவட்டத்தில் டென்னிஸ் விளையாட்டரங்கு ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் அம்பாறை பொது மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டரங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் தமெந்த விஜயசிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாணவர்கள் டென்னிஸ் விளையாட்டில் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Galleryயில் உள்ள படங்களைக் கிளிக் செய்து பெரிதாகப் பாருங்கள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)