திருநெல்வேலியில் கோர விபத்து மூவர் பலி இருவர் காயம்

யாழ்.திருநெல்வேலி - பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியானதுடன், மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.

கோப்பாய் பூதர் மடத்தடியை சேர்ந்த ம. மகிந்தன் (வயது 25) , கச்சேரி கிழக்கை சேர்ந்த றொ. சார்ள்ஸ் (வயது 23), மற்றும், சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகத்தை சேர்ந்த யோ. மேர்வின் டேனுஜன் (வயது 17) ஆகிய மூவரே உயிரிழந்துள்ளனர்.

ஒரு மோட்டார் சைக்கிளில் இருவரும் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மூவரும் பயணித்த வேளை பூங்கனிச்சோலைக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர்.

மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏனைய இருவரும் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருநெல்வேலியில் கோர விபத்து மூவர் பலி இருவர் காயம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House