
posted 22nd May 2022
"சிறைக் கைதிகளும் மனிதர்களே" எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் உள்ள தமது உறவுகளை பார்வையிட வரும் மக்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் காத்திருப்போர் மண்டபம் ஒன்று சனிக்கிழமை (21) யாழ்ப்பாண சிறைச்சாலை முன்றலில் திறந்து வைக்கப்பட்டது.
நீண்ட காலமாக யாழ் சிறைச்சாலையில் உள்ள தமது உறவுகளை பார்வையிட வரும் மக்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது.
யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகரினால் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் காத்திருப்போர் மண்டபம் ஒன்று அமைத்து தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தியின் முயற்சியால் அறக்கட்டளை நிதியம் ஒன்றின் நிதிப் பங்களிப்பில் காத்திருப்போர் மண்டபம் நேற்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சமாதானத்தை வலியுறுத்திச் சமாதானப் புறாவும் பறக்கவிடப்பட்டது.
யாழ். சிறைச்சாலை முன்றலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் எஸ்.கே. நாதன் அறக்கட்டளை நிதியத்தின் இயக்குநர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் மற்றும் யாழ். சிறைச்சாலையின் அத்தியட்சகர் கே.வி.ஏ. உதயகுமார, யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் எச்.எம். கேரத், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY