
posted 16th November 2021
தலைமன்னார் பகுதி தபாலகத்தில் கடமைபுரியும் தபால் அதிபர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் தபாலகம் மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் ஊழியர்கள் பொது மக்களுடன் அதிகமாக தொடர்புகள் வைத்திருப்பதாலும் அண்மையில் மன்னார் பகுதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து தலைமன்னார் பகுதி தபாலகத்தை சார்ந்தவர்களும் திங்கள் கிழமை (15.11.2021) காலை தலைமன்னார் வைத்தியசாலையில் ஆன்டீஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
தலைமன்னார் தபாலகத்தில் கடமைபுரியும் 12 தபால் ஊழியர்களில் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தலைமன்னார் தபாலகம் உப தபாலகங்கள் திங்கள் கிழமை 12 மணியுடன் மூடப்பட்டுள்ளன.
இவ் கொரோனா தொற்றுகளுக்கு உள்ளான இவர்களை நறுவலிக்குளம் கொரோனா சிகிச்சை இடைத்தங்கல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதர அதிகாரி தெரிவித்தார் (60).

வாஸ் கூஞ்ஞ