தராக்கி டி.சிவராம் நினைவலைகள் நூல்

இலங்கையின் தமிழ் ஊடகத்துறையின் முன்னோடிகளுள் ஒருவரான தராக்கி டி.சிவராம் அவர்களின் 17 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தராக்கி டி.சிவராம் நினைவலைகள் என்ற பெயரிலான நூல் ஒன்றை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சியில் சுவிஸ் சிவராம் நினைவு மன்றமும், கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும் ஈடுபட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியளவில் அவரது நினைவு தினத்தையும், நூல் வெளியீட்டையும் மட்டக்களப்பில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சிவராம் அவர்கள் உங்கள் உறவின் பெறுமானத்தை உணர்ந்தவர் என்ற அடிப்படையிலும், அவர் தொடர்பிலான தமிழ்ச் சமூகத்திடம் பகிர்ந்து கொள்ள உங்களிடம் பல்வேறு விடயங்கள் உள்ளன என்ற நம்பிக்கையிலும், அவை இந்நூலில் இடம்பெறுவதற்காக உங்களிடம் இருந்து ஒரு காத்திரமான கட்டுரையை, அனுபவப் பதிவை இவ் ஒன்றியங்கள் எதிர்பார்த்து நிற்கின்றன.

எனவே, இந்த நல்நோக்க முயற்சிக்குக் கைகொடுக்குமுகமாக உங்கள் மதிப்புமிக்க ஆக்கங்களை தயவு செய்து எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு இடையில் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு (shanthavarajah@gmail.com) அனுப்பி வைத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தராக்கி டி.சிவராம் நினைவலைகள் நூல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY