தமிழ்த் தேசிய துக்கநாளாக மே 18ஐ கடைப்பிடிப்போம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தமிழ்த் தேசிய துக்கநாளாக மே 18ஐ கடைப்பிடிப்போம்

தமிழ் மக்கள் மிகக்கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவுகூருகின்ற இந்தத் தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18ஐ தமிழ்த் தேசிய துக்க நாளாக கடைப்பிடிப்போம் - என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு. அகத்தியர் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மிகக் கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்தத் தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18ஐ தமிழ் தேசிய துக்க நாளாக நாம் அனைவரும் கடைப்பிடிப்போம்.

ஏற்கனவே வட மாகாண சபையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இதனை உணர்வுபூர்வமாக தமிழர் தாயகமெங்கும் அனுஷ்டிக்கத் தமிழ்த் தேசிய சக்திகளோடு கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

இந்த நாளில் முள்ளிவாய்க்கால் சென்று நினைவேந்தக் கூடியவர்கள் வழமைபோன்று முள்ளிவாய்க்கால் பொது கட்டமைப்பு ஒழுங்கு செய்த நிகழ்வுகளில் பெருந்திரளாக பங்கேற்குமாறு வேண்டி நிற்கின்றோம்.

இதேநேரம் அங்கு செல்லமுடியாதவர்கள் தங்கள் பிரதேச வழிபாட்டுத் தலங்களில் ஒன்று கூடி பிரார்த்தனைகளை மேற்கொள்ளவும் வேண்டுகின்றோம். அன்றைய தினம் அனைத்து தமிழர் வணிக வளாகங்கள், பொது இடங்களில் கறுப்புக் கொடிகளை பறக்கவிடுமாறும், கறுப்புப் பட்டியுடன் கடமைகளில் ஈடுமாறும் கோருகின்றோம்.

எமது தெருக்களை, பொது இடங்களை, வீட்டின் முன்னுள்ள வீதியோரங்களை துப்பரவு செய்வதுடன், அனைத்து கேளிக்கை நிகழ்வுகளையும் தவிர்த்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை ஒரு நேர உணவாகவேனும் உண்பதற்கு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் முன் வருவோம். மேலதிக, தனியார் கல்வி நடவடிக்கைகள் அனைத்தையும் அன்றைய தினம் முழுமையாக நிறுத்தி எம் இளையோருக்கு எம் வலிகளின் ஆழத்தை சாத்வீகமாக உணர்வபூர்வமாக வெளிப்படுத்துவோம். இந்த காலப்பகுதியில் இரத்த தான முகாம்களில் பங்கேற்போம்.

வலி சுமந்த குடும்பங்களுக்கு மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆறுதல் அளிப்போம். இந்தத் தமிழ்த் தேசிய துக்க நாளில் ஒட்டுமொத்த தமிழராக நிலத்திலும், புலத்திலும் எம் உச்சபட்ச ஆத்மார்த்த உணர்வை அமைதியாக உறுதியாக வெளிக்காட்டுவோம். அதற்காக அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம் என்றுள்ளது.

தமிழ்த் தேசிய துக்கநாளாக மே 18ஐ கடைப்பிடிப்போம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More