
posted 2nd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ்த் தேசிய அரசியல்பரப்புக்கு பேரிழப்பு - அங்கஜன் எம்.பி. அனுதாபம்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
தனது சட்டத் தொழிலை தியாகம் செய்து மக்களுக்காக தன்னை அரசியலில் ஈடுபடுத்திய பெருமகான் அவர். மேலும் தமிழர்களின் மூன்று வகையான போராட்ட காலங்களிலும் தனது அரசியல் சாணக்கியத்தையும், அனுபவத்தையும் பல சந்தர்ப்பங்களில் இராஜதந்திரங்களாக அவர் பயன்படுத்தியிருந்ததை இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)