தமிழினப் படுகொலையை அங்கீகரிக்க டயஸ்போறாவின் நடவடிக்கை போதாது! - சபா குகதாஸ்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தமிழினப் படுகொலையை அங்கீகரிக்க டயஸ்போறாவின் நடவடிக்கை போதாது! - சபா குகதாஸ்

சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு குரல் கொடுக்கும் சம நேரம் தமிழினப் படுகொலையை அங்கீகரிக்கும் மிகப் பிரதானமான ராஐதந்திர நகர்வை புலம்பெயர் தேசத்தில் உள்ள அத்தனை அமைப்புக்களும் தத்தமது நாடுகளின் உயர் ராஐதந்திர தரப்புக்கள் ஊடாக விரைந்து கையாள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நீர்த்துப் போகின்ற அபாயம் கூர்மையடைகின்றது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சபா குகதாஸ் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலையை உலகின் முதன்மையான நாடுகள் அங்கீகரிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களினால் முன் நகர்த்தப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நீர்த்துப் போகின்ற அபாயம் கூர்மையடைகிறது.

தாயக புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்தாலும் அது கைகூட பூகோள நலன் சார்பு நாடுகள் சாதகமாக பச்சை விளக்கை காட்டவில்லை. இதுவும் கால இழுத்தடிப்புக்கு வாய்ப்பாகி விடும்.

சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு குரல் கொடுக்கும் சம நேரம் தமிழினப் படுகொலையை அங்கீகரிக்கும் மிகப் பிரதானமான ராஐதந்திர நகர்வை புலம்பெயர் தேசத்தில் உள்ள அத்தனை அமைப்புக்களும் தத்தமது நாடுகளின் உயர் ராஐதந்திர தரப்புக்கள் ஊடாக விரைந்து கையாள வேண்டும். இதுவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான கதவுகளை திறக்கும். அதன் ஊடாகவே உறுதியான பரிகாரநீதி மற்றும் இன நல்லிணக்கம் ஏற்படும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைவரும் தாம் வாழும் நாடுகளில் ஒரே காலத்தில் சரியான முன் நகர்வை மேற் கொண்டால் தமிழினப் படுகொலைக்கான அங்கீகாரம் கிடைக்கும். அதுவே அரசியல் தீர்வுக்கான இறுதி வழியாகவும் அமையும்.

தமிழினப் படுகொலையை அங்கீகரிக்க டயஸ்போறாவின் நடவடிக்கை போதாது! - சபா குகதாஸ்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More