
posted 24th May 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நேற்று திங்கட்கிழமை முதல் கல்விப் பொருத்தராதரப்பத்திர சாதாரண தர (ஜீ.சீ.ஈ சா.தர)ப் பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்தப் பரீட்சை, நாடளாவிய ரீதியில் 3844 பரீட்சை நிலையங்களிலும், 542 இணைப்பு மத்திய நிலையங்களிலும் நடைபெற்று வருகின்றது.
இம்முறை இப்பரீட்சைக்கு 4,07,129 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 1,10,367 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றியுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தோற்றுபவர்களுள் 590 விசேட தேவையுடையவர்களும் அடங்குவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மூன்று தசாப்தகாலங்களாக இடம்பெற்ற யுத்த காலகட்டத்தில் கூட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகளால் பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தப்படாது யாழில்கூட இறுதிக்கட்ட யுத்த்தின் போதும் அமைதியாக பரீட்சைகள் இடம்பெற்றன எனவும்,
எனவே நாட்டில் தற்போதுள்ள நிலமையைக் கருத்திற் கொண்டு இடையூறின்றி இப்பரீட்சையை நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளார்.
இதேவேளை பரீட்சைக்குத் தோற்றிவரும் மாணவர்கள் நலன் கருதி தற்சமயம் நாட்டில் அமுல் நடத்தப்பட்டுவரும் மின்சாரத்தடை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக பரீட்சைக்காலம் முடியும் வரை தினமும் மாலை ஆறு மணிக்குப் பின்னர் மின்தடை அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இம்முறை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட கல்விமான்கள், சமூக தலைவர்கள் மற்றும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY