
posted 14th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
டெங்கு ஒழிப்பு வார செயற்திட்டம் ஆரம்பம்!
டெங்கு ஒழிப்பு வாரமாகனது இன்று (14) திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன அவர்களது பணிப்பின் பேரில் வடக்கு மாகாணம் முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பமாகியது.
அந்தவகையில் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் மேற்கு பகுதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. உத்தியோகத்தர்கள் வீடு வீடாக சென்று டெங்கு பரவும் வகையில் உள்ள பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கினர்.
இதில் சங்கானை பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் ஊழியர்கள் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பங்கெடுத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)