
posted 2nd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆர். சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் தனியார் மலர் சாலைக்கு இன்று (02) பிற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அன்னாரின் குடும்பதினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எஸ் ராசமாணிக்கம் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு
02.07.2024
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி
அசல் பிரதியை பார்வையிட>>>>>>>>ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆர். சம்பந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)