
posted 16th December 2022
அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுபளை பிரதான வீதியில் சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இச்சம்பவம் வியாழன் (15) மதியம் 01.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனையில் இருந்து திருக்கோயில் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் மரத்துடன் மோதியதில் காரை ஓட்டிச் சென்ற சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிழந்தவர் அக்கரைப்பற்று ஊர்ப்போடியார் வீதியைச்சேர்ந்த ஆறுமுகம் சசீந்திரன் (வயது 52) எனும் குடும்பஸ்தரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார். இவர் திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராகக் கடமையாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)