சேதன உரவிநியோகம்

அம்பாறை மாவட்டத்தின் முக்கிய விவசாயப் பிரிவான நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையப் பிரிவில் விவசாயிகளுக்கு சேதன உரம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

தற்பொழுது இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கைக்கென இந்த சேதன உரவிநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையப் பொறுப்பதிகாரியும், சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஐ.எல்.ஏ.ஹார்லிக் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையப்பிரிவில், 7600 ஏக்கரில் இம்முறை பெரும்போக நெற்செய்கை முன்னெடுக்கப்படும் நிலையில், ஒரு ஏக்கருக்கு முதலாம் கட்டமாக ஒரு லீற்றர் திரவ சேதன உரமும், கே.சீ.எல். (பொட்டாசியம் குளோரைட்) உரம் 24 கிலோவும் வழங்கப்பட்டுவருவதாக சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹார்லிக் தெரிவித்தார்.

மேலும் குறித்த விவசாயிகளுக்கான திரவசேதன மற்றும், கே.சீ.எல்.உரவிநியோக ஆரம்ப நிகழ்வு, நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹார்லிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.பைஸால் காசிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திரவ சேதன உரவிநியோகத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை இரசாயன உரப்பாவனை மூலமே பழக்கப்பட்ட விவசாயிகள் தற்சமயம் விநியோகிக்கப்படும் திரவ சேதன உரம் குறித்து பெரும் அதிருப்தி தெரிவித்த வண்ணமுள்ளனர்.

இதனால் நெற் பயிர்கள் எதிர்பார்த்த அளவு வீரியம் பெறவில்லையெனவும், இம்முறை விளைச்சல் குறைந்து தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிய நிலையே ஏற்படுமெனவும் கவலையும், அச்சமும் தெரிவிக்கின்றனர்.

சேதன உரவிநியோகம்

எ.எல்.எம்.சலீம்

விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்

Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை

Apartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments

Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts

Villas - விலாஸ் வேண்டுமா? Villas

B & B - B & B வேண்டுமா? B&B

Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House