செல்வச்சந்நிதியில் திருவாசக விழா

ஆலய சூழலில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரம சைவக் கலை பண்பாட்டுப் பேரவை ஏற்பாடு செய்திருந்த திருவாசக விழா நேற்று முன்தினம் (08) ஞாயிற்றுக்கிழமை செல்வச்சந்நிதி ஆலய பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நாயன்மார்களின் திருவுருவம், திருவாசக ஏடுகள் ஆலயத்திலிருந்து திருவாசக பாராயணத்துடன் ஊர்வலமாக ஆச்சிரமத்துக்கு எடுத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

திருவாசகம் தொடர்பாக ஒய்வுநிலை அதிபர் த.ஆ. சிவநாதன். ஆசிரியர் க. கயிலநாதன் அவர்களும் சொற்பொழிவாற்றினர்.

சிறப்பு நிகழ்வாக ஆடிப்பாடி மகிழ்வோம். வாணிக்கலைஞன் செ. செந்தில்வேல் ஆசிரியர்,

துயர் பகிர்வோம்

திருவாசக இன்னிசை நுண்கலைமாணி செல்வி மயூரதி குகனேஷ்வரன் அவர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கல்விச் செயற்றிட்டமாக மூன்று துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் அமரர் தியாகராசா மகேஸ்வரன் ஞாபகர்த்தமாக தரம் - 01 தொடக்கம் உயர்தரம் வரையான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இதில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், அறநெறி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

செல்வச்சந்நிதியில் திருவாசக விழா

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

The Best Online Tutoring

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More