
posted 21st May 2022

கொடிகாமம் மத்தியில் தனியாருக்கு சொந்தமான துயிலுமில்ல காணி இராணுவ முகாமுக்கு காணி அளவிடப்பட்ட நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மக்களின் எதிர்ப்பையடுத்து அளவீடு கைவிடப்பட்டது.
15ஆவது கஜபாகு படைப் பிரிவுக்கே காணி அளவீடு செய்யப்பட்டுள்ளது. 10.5 பரப்பு தனியாருக்குச் சொந்தமான துயிலுமில்ல காணியே இவ்வாறு அளவிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டபோது மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த 17 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக படகு ஒன்றில் செல்ல முயன்ற 17 பேர் நேற்று திருமலை கடலில் கைதாகினர்.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியா,
திருகோணமலையை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதாகினர். இவர்கள் திருகோணமலை பொலிஸாரால் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
விசாரணைகளை நடத்திய திருகோணமலை நீதிவான் 17 பேரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறிலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டம் - பாண்டியன்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை துரைரட்ணசிங்கம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் நீண்ட காலமாக தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் இருவர் காயமடைந்தனர்.
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் வாகனம் முற்றாக சேதமடைந்ததுடன், வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைத்த நிலையில் சிகிச்சைக்காக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY