சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது ஞாபகர்த்த நிகழ்வும், நூல் வெளியீடும் (மட்டக்களப்பில்)

மட்டக்களப்பில் வைத்து 2004 ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது ஞாபகர்த்த நிகழ்வும், “ஊடகர் ஜி.நடேசன் நினைவலைகள்” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும் இன்று (ஞாயிறு) மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும், ஒன்றியத்தலைவர் இ. தேவஅதிரன் தலைமையிலும், மட்டக்களப்பு பொது நூலககேட்போர் கூடத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வின் ஆரம்பத்தில் மறைந்த ஊடகவியலாளர்களுக்காக மௌன அஞ்சலி இடம்பெற்றதுடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவிலாளர் அமரர். நடேசனின் உருவப்படத்திற்கு அருட்தந்தை அ. நவரத்தினம், வீரகேசரிவார வெளியீட்டின் முன்னாள் பிரதம ஆசிரியர் பி. தேவராஜ் ஆகியோர் மலர் மாலை அணிவித்தது மலரஞ்சலியும் இடம்பெற்றது.

அமரர் நடேசனின் உருவப்படத்திற்கான மலரஞ்சலியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், கோவிந்தன் கருனாகரம் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், ஜி. ஸ்ரீநேசன் உட்பட சிரேஷ்ட உடகவியலாளர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டதுடன், நினைவுச்சுடரும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து நிகழ்வில், கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான இ. பாக்கியராஜா தலைமை உரையாற்றினார்.

அத்துடன் வீரகேசரிவார வெளியீட்டின் முன்னாள் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான பி. தேவராஜ், முன்னாள் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. துரைரெத்தினம் ஆகியோர் மறைந்த ஊடகவியலாளர் ஜி நடேசன் பற்றிய சிறப்பு நினைவுப்பகிர்வு உரைகளையும் ஆற்றினர்.

இதேவேளை சுவிஸ் சிவராம் ஞாபகர்த்த மன்றமும், கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும் இணைந்து வெளியிட்டுள்ள “ஊடகர் ஜி. நடேசன் நினைவலைகள்” எனும் நடேசன் பற்றிய கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த நூலை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும் தேனாரம் (www.thaenaaram.com) கிழக்கு மாகாண செய்தியாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம், அருட் தந்தை அ. நவரத்தினம் அவர்களுக்கு முதற்பிரதியை வழங்கி வெளியிட்டு வைத்ததுடன், மேலும் பல முக்கியஸ்தர்களுக்கும் நூலின் சிறப்புப் பிரதிகளை வழங்கி வைத்தார்.

இந்த நூலின் வெளியீட்டுரையினை கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் இ. தேவ அதிரன் நிகழ்த்தியதுடன், ஒன்றியத்தின் செயலாளர், சக்திவேல் நன்றியுரையும் பகிர்ந்தார்.

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது ஞாபகர்த்த நிகழ்வும், நூல் வெளியீடும் (மட்டக்களப்பில்)

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள்

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More