சுகாதர நடைமுறைகளுக்கேற்ப நாளாந்த வழிபாடுகளை நடாத்த தடையில்லை.

ஆலயங்கள் மற்றும் சமய வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், ஆனால் இன்றைய நிலையில் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்துக்கமைவாக வழிபாடுகள் மற்றும் சமய அனுஷ்ரானங்களை மேற்கொள்ள முடியும் என மன்னார் பொலிசார் மன்னார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தொடர்ந்தே மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவகுமார் இவ்வாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

விடுதலை புலிகளின் இறந்த மாவீரர்களின் நிலைவேந்தல்கள் இடம்பெற இருப்பதால் 20ந் திகதி தொடக்கம் 27 ந் திகதி வரை மன்னாரில் ஆலயங்களில் பூசை வழிபாடுகளை தடைசெய்யக்கோரி மன்னார் பொலிசார் வெள்ளிக்கிழமை (19.11.2021) மன்னார் நீதவான் நீதிமன்றில் விஷேட விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தனர்.

இவ் விண்ணப்பத்தை மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகருடன் இணைந்து முருங்கன், சிலாபத்துறை மற்றும் இலுப்பைக்கடவை உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து இவ் விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தனர்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராயம் உட்பட ஏனைய ஆலயங்கள் சிலவற்றில் இடம்பெறும் பூசை வழிபாடுகளை குறிப்பட்ட 20. ந் திகதி தொடக்கம் 27 ந் திகதி வரை தடைசெய்யக்கோரியே இவ் விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தனர்.

இதன்போது பொதுமக்களின் நலன்கருதி சட்டத்தரனிகள் இவ் விண்ணப்பத்துக்கு எதிராக மன்றில் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
இரு பக்கங்களின் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்த நீதிபதி பெருமாள் சிவகுமார் பொலிசாரின் விண்ணப்பத்திற்கு அமைவாக விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என்று நீதவான் கட்டளை பிறப்பித்ததுடன்

ஆலயங்களில் நடைபெறுகின்ற சாதாரண திருப்பலி மற்றும் பூசை வழிபாடுகள் மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லையெனவும் சுகாதார வழி முறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் நீதிபதி இங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

சுகாதர நடைமுறைகளுக்கேற்ப நாளாந்த வழிபாடுகளை நடாத்த தடையில்லை.

வாஸ் கூஞ்ஞ

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 08.09.2025

Varisu - வாரிசு - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 06.09.2025

Varisu - வாரிசு - 06.09.2025

Read More
Mahanadhi - மகாநதி - 05.09.2025

Mahanadhi - மகாநதி - 05.09.2025

Read More