சிலசெய்தித் துளிகள்
சிலசெய்தித் துளிகள்

நெல்லியடியில் வீடொன்றை உடைத்து நகைகள் மற்றும் அலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நெல்லியடி நகரப் பகுதியில் உள்ள வீடொன்றை பட்டப்பகலில் உடைத்து நகைகள் மற்றும் அலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் திருட்டுப் போயிருந்தன.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் 28 வயதுடைய ஆண் ஒருவரும் 20 வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஐ போன் ஒன்றும் ஐ பாட் ஒன்றும் 6 கிராம் எடையுடைய தோடுகளும் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.


முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, முத்துஐயன் கட்டு பகுதியில், கஞ்சா கடத்திச் சென்ற கணவன் மனைவி இருவரையும், ஒட்டுசுட்டான் பொலிஸார் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

ஒட்டுசுட்டான் தொட்டியடிப் பகுதியில், வீதி சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், மோட்டார் சைக்கிளில், சந்தேகமான முறையில் சென்ற கணவன் மனைவி இருவரையும் சோதனை செய்தபோது, ஒரு கிலோ 360 கிராம் கேரளா கஞ்சாவை, கடத்தி செல்ல முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன் போது, 40 வயதுடைய பெண்ணும் அவரது கணவரான 49 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், முத்துஐயன்கட்டு பகுதியை சேர்ந்தவர்கள்.


சிலசெய்தித் துளிகள்

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் 11 பரல்களில் எரிபொருள்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 பரல்களில் மண்ணெண்ணெய், 2 பரல்களில் பெற்றோல் மற்றும் ஒரு பரல் டீசல் என்பனவே கைப்பற்றப்பட்டன என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் மயிலங்காடு – குப்பிளான் பகுதியில் உள்ள வீடொன்றோடு இணைந்த கடை ஒன்றிலிருந்தே நேற்று சனிக்கிழமை மாலை இவ்வாறு எரிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெற்றோல் ஒரு லீற்றர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்தபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
மண்ணெண்ணெய் சுமார் ஆயிரத்து 670 லீற்றர், பெற்றோல் சுமார் 310 லீற்றர் டீசல் சுமார் 200 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளன.

49 மற்றும் 40 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

சிலசெய்தித் துளிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர்,வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More