சிலசெய்தித் துளிகள்
சிலசெய்தித் துளிகள்

தீவகப்பகுதிக்கு இந்தியாவின் மண்ணெண்ணை உதவி

இந்திய அரசாங்கத்தினால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக வழங்கி வைக்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணை யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ள நிலையில், அவை இன்று ஊர்காவற்துறை, நயினாதீவு, எழுவைதீவு மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 700 மீனவர்களுக்கு 15000 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.

ஒரு பகுதி தீவுகளுக்கு இடையே படகு சேவைக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பகுதியில் துர்க்கை அம்மன் ஆலய வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடிக்காத நிலையில் கைக் குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் கைக் குண்டு ஒன்று காணப்படுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைக் குண்டை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்னரே கச்சதீவு விடயம் பற்றி தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் கச்சதீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென கோரிக்கை விடுத்திருந்தார்.

எனவே இது தொடர்பில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு என்ன என வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

இது இரண்டு நாடுகளின் உடன்படிக்கை இந்த நிலையில் கச்சதீவு எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்குச் சாதகமாக இருக்குமானால் எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களை ஒட்டி இந்திய அரசுடன் பேச வேண்டும். அதற்கு முன்னதாக கச்சதீவை இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கருத்து தொடர்பில் முதலில் எமது கடற்தொழிலாளர்களின் கருத்துகளை அறியவேண்டும்.

அவர்களின் கருத்துக்களை ஒட்டியே எங்கள் முடிவுகள் அமையும். அதற்கு முன்னதாக எழுந்தமானமாக கருத்துக்களைக் கூறமுடியாது.

அத்தோடு இலங்கை-இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவைப் படகு பிரச்னை தீர்க்கப்படாதுள்ளது.

எனவே அது தொடர்பில் இந்திய அரசுடன் பேசும்போது கச்சதீவு விடயம் பற்றியும் பேசவேண்டும். இதுவொரு இராஜதந்திர ரீதியான நடவடிக்கை, என்றார்.

சிலசெய்தித் துளிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள்

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More