
posted 1st August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சிறைச்சாலைகளில் மரணமடைந்த அரசியல் கைதிகளின் நினைவேந்தல்
இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்த தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று திங்கள் (31) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
குரலற்றவர்களின் குரல் பணியிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், பொதுச்சுடரினை தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனையடுத்து மலர் மாலையினை யாழ். மறைமாவட்டக் குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் அணிவித்தார். தொடர்ந்து, மலரஞ்சலி நிகழ்வும் அதன்பின், நினைவுச் சுடரும் ஏற்றிவைக்கபட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், சர்வமதப் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், முன்னாள் போராளிகள், விடுதலையான அரசியல் கைதிகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)