
posted 26th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா - ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்!
(வடமராட்சி ஓகஸ்ட் 25)
தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது என தெரிவித்துள்ள அக்கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் இந்நிலைப்பாட்டை கடந்த 33 அண்டுகளுக்கு மேலாக எமது கட்சி வலியுறுத்தி வருந்திருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (25.08.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்;
எமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம்முதல் இந்நிய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அதிலும் குறிப்பாக 13ஆவது திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக கொண்டு அதிலிருந்து நாம் முன்னேறி மேலும் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்தி வந்திருக்கின்றது.
எமது மக்களுக்கான அரசியல் நிலைப்பாட்டை விளங்கிக் கொண்ட உலக வல்லரசான அமெரிக்கா இன்று சில நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் கட்சிகளை அழைத்து 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது புத்திசாலித்தனமானது என்ற கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விடயமானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீர்க்கதரிசனமான தூர நோக்கு கொண்ட அரசியல் தீர்வு முயற்சிக்கான ஓர் அங்கீகரமாகவே நாம் பார்க்கின்றோம்.
ஏற்கனவே சர்வதேசம் எமது பிரச்சினையில் தலையிடாது எமது பிரச்சினைகளுக்கான தீர்வை நாமே தேடிக்கொள்ள வேண்டும் என எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியபோது சில அரசியல் கட்சிகளும் ஆய்வாளர்களும் அதனை பொருட்படுத்தாது ஒரு மலினமான கூற்றாக விமர்சனம் செய்திருந்தனர்.
ஆனால், அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சில அரசியர் கட்சிகளுடனான சந்திப்பில் அமெரிக்க தூதுவர் சர்வதேசம் ஒரு வரையறைக்கு மேல் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாது என அழுத்தம் திருத்தமாக சொல்லியிருந்தார்.
அவ்விடயத்தையும் நாங்கள் நீண்டகாலமாக சொல்லிவந்ததே நடைமுறையில் சர்வதேசமும் ஏற்றுக்கொண்டது. இதுவும் எமது நிலைப்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.
ஆயினும் சிலர் வாக்குவங்கிகளையும் நாடாளுமன்ற ஆசனங்களையும் இலக்குவைத்து நடைமுறைச் சாத்தியமற்ற வெற்று வாக்குறுதிகளையும் ஆக்கிரோச கருத்துக்களையும் கக்கிய வண்ணமே இருந்தனர்.
இன்று உலக வல்லரசான அமெரிக்கா எனது நிலைப்பாட்டை படிப்படியாக வெளிப்படுத்திவரும் நிலையில் ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு அங்கீகாரம் பெற்றுவருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிக்கின்றது - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!
(வடமராட்சி ஓகஸட் 25)
வடபிராந்தியத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (25.08.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்;
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக ஒரு சில வணிகர்கள் சார்ந்தோர் மத்தியில் போதைப் பொருள் கைப்பற்றப்படுவதும் குறித்த பாவனையால் செல்வந்த இளைஞர்கள் உயிரிழப்பதும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதும் அதிகரித்துள்ளது.
இது எமது இளம் சமுதாயத்தை வெகுவாக பாதித்தும் வருகின்றது என்றும் சுட்டிக்காட்டிய அவர் இவ்விடயத்தில் பெற்றோர்களும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துகின்ற தரப்பினரும் உரிய அக்கறை செலுத்த வேண்டும் எனவும் வலியுறத்தியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள் பலர் உயர் அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்த கருத்துக்கள் குடாநாடடையே உலுக்கி போட்டது.
சமூகவிரேத செயல்களில் ஈடுபடுகின்ற சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிசாரக்கு தாம் வழங்கும் தகவல்கள் சில நிமிடங்களிலேயே குறித்த தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்படுவதாகவவும் அச்சந்தேக நபர்களே தம்மிடம் தொடர்புகொண்டு இவ்வாறு நீங்கள் பொலிசாருக்க தகவல்கள் வழங்கியுள்ளீர்கள் என வினாவுகதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இது உண்மையில் சமூக விரோத செயற்பாட்டை மேற்கொள்பவர்களுக்கு ஏதுவானதான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுப்பதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
சமீபத்தில் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமை மூடி அவர்கள் வெளியேற முற்பட்ட போது அப்பகுதி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு பொலிசார் மீது நம்பிக்கை இல்லை, இராணுவம் வெளியேற வேண்டாம் என தமது ஏக்கத்தை வெள்ப்படுத்தியிருந்தனர். இதிலிருந்து ஒரு செய்தியை உணரக்கூடியதாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மதவாதத்தை முதலீடாக்க நீதிபதியை விமர்சிப்பதை ஏற்க முடியாது - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!
(வடமராட்சி ஓகஸட் 02)
குருந்தூர் மலை விவாகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அவமதித்து கருத்து வெளியிட்ட தென்னிலங்கை அரசியல் வாதிகளின் செயற்பாட்டை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்ந
நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்கு உள்ளே சில மதவாத அரசியல் வாதிகள் வெளியிடுகின்ற கருத்துக்கள் தமிழ் மக்களை ஆத்திரமூட்டுவதாக இருக்கின்றது.
குருந்தூர்மலை விடயம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உடன்பாடு இல்லை எனில் அதை மேல்முறையீடு செய்வதற்கும் அல்லது உச்ச நீதிமன்றம் செல்வதற்கும் எமது நாட்டு சட்டத்தில் வழிவகைகள் உள்ளது.
அவ்வாறு இருக்கும்போது தென்னிலங்கையில் நலிவடைந்த மலிவடைந்துபோகும் சில அரசியல் பிரமுகர்கள் மதத்தை முதலீடாக்கி தமது அரசியல் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கின்றனர். அதன் வெளிப்பாடாக நீதித்துறையை இனவாத ரீதியில் விமர்சிக்க தலைப்பட்டுள்ளனர்.
இவ்வாறான கருத்துக்கள் இன நல்லிணக்கத்தில் இடைவெளியை உருவாக்கும் ஒன்றாகவே அமைகின்றது. அந்த வகையில் நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதும் தனிப்பட்ட ரீதியில் நீதிபதியை விமர்சிப்பதையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)