சிறப்பாக நடைபெற்ற பளை மத்தியின் சாதனையாளர்கள் கெளரவிப்பு விழா

அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் வெற்றியீட்டி சாதனைபடைத்து தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்களையும், அவர்களது பெற்றார்களையும் கெளரவிக்கும் விழா இன்று கல்லூரி அதிபர் திரு.க. உதயகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திரு.சி.க. கிருஸ்னேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு மு. காந்தச்செல்வன் (ADE-Phy Edu. ) அவர்களும், கெளரவ விருந்தினர்களாக திரு ஆ. பவானந்தன் (ISA-Phy Edu) அவர்கள் மற்றும் கிருபா லேணர்ஸ் உரிமையாளர் திரு கிருபாகரன் அவர்களும் , கல்லூரியின் பழையமாணவர் திரு காந்தரூபன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் திரு ஹரிகரன், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் திரு டிலக்சன் மற்றும் பெற்றார்கள் பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்டு கெளரவிப்பு பட்டயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அத்துடன் கல்லூரியின் லண்டன் வாழ் பழையமாணவரும், பாடசாலையின் வளர்ச்சியில் அயராது பாடுபடுபவர்களில் ஒருவருமான திரு. காந்தரூபன் அவர்களினால் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் தலா பத்தாயிரம் ரூபா வீதம், நிதியுதவி வழங்கிவைத்தார் என்பதுடன் கிருபா லேணர்ஸ் உரிமையாளர் திரு கிருபாகரன் அவர்கள் 25,000/= பெறுமதியான கெளரவிப்பை பட்டயங்கள் (Shield) வழங்கியிருந்தமை குறிப்படத்தக்கது.

சிறப்பாக நடைபெற்ற பளை மத்தியின் சாதனையாளர்கள் கெளரவிப்பு விழா

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More