posted 14th December 2023
Congratulation to S Thillainathan
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சின்னத்துரை தில்லைநாதனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து 24ஆவது தடவையாக நடத்திய சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில், அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றும் எமது தேனாரம் வடமாகாணச் செய்தியாளர் யாழ்ப்பாணம், வடமராட்சி - புலோலியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வின் பின்னர், கொழும்பிலிருந்து வெளிவரும் 'தினகரன்', 'தமிழன்' பத்திரிகைகளின் ஆசிரியர் பீடத்தினரால் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களாகிய எச் எல் டி மஹிந்தபால சீதாரஞ்ஜனி, ஸ்டான்லி சமரசிங்கா, அல்ஹாஜ் எம் ஏ எம் நிலாம் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்