
posted 4th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சாய்ந்தமருதில் கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்
சாய்ந்தமருது பிரதேசத்தில் உக்கிரடைந்துள்ள கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, எச்.எம்.எம். ஹரீஸ், கரையோரம் பேணல் திணைக்களத்தின் மாகாண பொறியியலாளர் எம். துளசிதாசன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த வேலைத் திட்டத்திற்கு 55 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 35 மில்லியன் ரூபாவை நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்ச ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)