
posted 15th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சாணக்கியன் அஞ்சலி
தமிழ் மக்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்ட புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்கள் அடக்கம் செயப்படுள்ள சென்னை கோயம்பேடு பகுதியில் இருக்கும் அவரது கட்சி அலுவலகத்தில் சென்று வட கிழக்கு மக்கள் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அஞ்சலி செலுத்தினார்.
இதன் போது அங்குள்ள ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிடுகையில்,
திரு. விஜயகாந்த் அவர்கள் 80 மற்றும் 90 ஆண்டு காலப்பகுதியில் தமிழ் ஈழ போராட்டத்துக்கு மிக முக்கிய ஆதரவு வழங்கியவர்களில் மிக முக்கியமான ஒருவர். எமக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியானவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் எனில் அவரது ஆதரவாளர்கள் ஈழத் தமிழர்களுடன் மற்றும் ஈழ தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இந்த போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் எனக் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)