சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

களுவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு இன்று(வியாழக்கிழமை) இரா. சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தனக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு குறித்து இரா. சாணக்கியன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

“களுவாஞ்சி பொலிஸாரினால் எனக்கு எதிராகவும், நான் சார்ந்தவர்கள் என்ற அடிப்படையில், என் சார்ந்தவர்கள் யார் என தெரியவில்லை. இலங்கையில் வாழும் அனைவருமே நான் சார்ந்தவர்கள்தான்.

அவ்வாறு இருக்கும்போது, 14 நாட்களுக்கு எந்தவிதமான விடயங்களும், வீதியை மறித்தோ, பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ, எந்தவொரு விடயமும் செய்யக்கூடாது என நீதிமன்றத்தினால் ஒரு தடை உத்தரவு வழங்கியுள்ளனர்.

இதான் இன்று நாட்டில் அராஜகமான நிலை, ஏன் என்றால் இன்று இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலுமே மக்கள் வீதியிலேயே போராடும் போது, இன்று களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாத்திரம் ஒரு நீதிமன்ற தடை உத்தரவினை எடுத்திருக்கின்றார். என் என்று சொன்னால், இந்த நாட்டில், ஒரு நாடு ஒரு சட்டம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் தமிழர்களுக்கு இன்னுமொரு சட்டமா என்பதுதான் நீண்டகாலமாக எங்களுக்கு இருக்கின்ற கேள்வி.

அதனை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கின்றார் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. ஏன் என்றால் இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறாத இடங்கள் இல்லை. அவ்வாறு நடக்கும்போது, களுவாஞ்சிக்குடியில் மாத்திரம் இவ்வாறு தடை உத்தரவினை பெற்றுக்கொண்டுள்ளமையினை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான விடயங்கள் ஊடாக மக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முனையும் போது, மக்கள் இதனையும் விட உத்வேகமாக போராட முனைவார்கள். நான் இன்று வரை போராட்டங்களை செய்ய வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் இந்த தடை உத்தரவு கிடைத்ததற்கு பின்னர் போராட்டம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினை தருகின்றது.

"கோட்டா கே கோம்" என்ற விடயம் நடைபெறும் வரை, அதாவது, கோட்டாபய ராஜபக்ஷ வீடு செல்லும் வரை இந்த போராட்டங்கள் தொடர வேண்டும். அதிலே என்னுடைய பங்களிப்பும் நிச்சம் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More