சாணக்கினுக்கு பதவியா? வீண் புரளி என்கிறார் அரியம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் உப தலைவர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நியமிக்கப்படவுள்ளாரென வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதும், விசமத்தனமானதுமென இலங்கை தமிழரசுக்கட்சியின் ஊடக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான. பா. அரிய நேரத்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தற்போதய சிரேஷ்ட உப தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிர் பொன் செல்வராசா பதவி விலகவுள்ளதாகவும், அந்தப் பதவிக்கே, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

துயர் பகிர்வோம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தினம் சில ஊடகங்களிலும், முக நூல், இணையங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது சிரேஷ்ட உப தலைவர் பொன். செல்வராசா தமது பதவிவிலகலை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுள்ளார் எனவும் அச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த விவகாரம் தொடர்பில் ஊடகச் செயலாளர் அரியநேத்திரன் கருத்து வெளியிடுகையில்;

இது வீண்புரளி எனவும், இது சிறுபிள்ளைத்தனமானதும், உண்மைக்கு புறம்பான, விஷமத் தனமான தகவலெனவும் விசனம் தெரிவித்தார்.
கட்சி யாப்பின்படி பொதுச் சபையின் அங்கீகாரத்துடனேயே பதவி நியமனங்கள் வழங்கப்பட முடியுமெனவும், மத்திய செயற்குழுவில் இதற்கான வாய்ப்பில்லையெனவும் சுட்டிக்காட்டிய ஊடகச் செயலாளர் அரியநேத்திரன், எமது சிரேஷ்ட உப தலைவர் பொன். செல்வராசா பதவி விலகவில்லை எனவும், அத்தகைய உத்தேசம் அவருக்கு இல்லையெனவும், இப்போதும் அவர் சிரேஷ்ட உப தலைவர்தான் எனவும் தெரிவித்தார்.

எனினும் தனது சுகயீனம் காரணமாக கட்சியால், மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பில் வழங்கப்பட்ட பொறுப்பு ஒன்றிலிருந்தே அவர் விலகவுள்ளாரெனவும் அவர் குறிப்பிட்டார்.

சாணக்கினுக்கு பதவியா? வீண் புரளி என்கிறார் அரியம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More