
posted 24th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சம்மாந்துறையில் இல்ல விளையாட்டு போட்டி
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசியப் பாடசாலை) வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி சிறப்பாக நடைபெற்றுள்ளது.
வித்தியாலய அதிபர் திருமதி. யூ. நஜீபா ஏ. றகீம் தலைமையில் நடைபெற்ற இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில், சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் ஆகிய இல்லங்கள் பங்கு கொண்டன.
வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் இறுதி நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அத்துடன் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். செய்யத் உமர் மௌலானா, பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
போட்டியில் கூடிய புள்ளிகளைப் பெற்று சிவப்பு இல்லம் சாம்பியனாகத் தெரிவாகியது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்களை வழங்கி வைத்து உரையாற்றுகையில்,
இத்தகைய பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களின் ஆற்றல்கள், திறமைகளை வளர்ப்பதற்கு ஊக்குவிப்பாக அமைவதுடன்,
சிறந்த நற்பண்புகள் கொண்ட மாணவ சமுதாயத்தை உருவாக்கவும் வழிவகுக்கின்றது எனவும், இலைமறை காய்களாகவுள்ள எமது இளைஞர்களுக்கு ஊக்கமளித்து தேசிய மட்ட சாதனைகளை நிலை நாட்டவும் நாம் ஆவன செய்ய வேண்டும் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)