சம்பந்தனின் இறுதிக்கிரிகையில் அண்ணாமலை பங்கேற்பார்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சம்பந்தனின் இறுதிக்கிரிகையில் அண்ணாமலை பங்கேற்பார்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியையில் இந்தியாவை ஆளும் கட்சியான பா. ஜ. கவின் தமிழ்நாடு தலைவரான அண்ணாமலை பங்கேற்கவுள்ளார். தனது பங்கேற்பை அண்ணாமலையே தன்னிடம் உறுதிப்படுத்தினார் என்று சி. சிறீதரன் எம். பி. தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளபோதும் அதுதொடர்பில் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்றும் சிறீதரன் எம். பி. கூறினார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பெருந்தலைவர் சம்பந்தனின் மறைவையொட்டியும், இறுதிக் கிரியைகள் இடம்பெற இருப்பதையொட்டியும் கிழக்கு மாகாணம் பெரும் துயரில் ஆழ்ந்துள்ளது. குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை போன்ற பல்வேறு முக்கிய நகரங்களில் திரு சம்பந்தன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி பதாகைகள் பெருமளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக முஸ்லிம் மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட மறைந்த தலைவர் சம்பந்தனின் மறைவையொட்டி பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம் மக்களும் கண்ணீர் அஞ்சலி பதாகைகளை காட்சிப்படுத்தியுள்ளமை விசேட அம்சமாகும்.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

சம்பந்தனின் இறுதிக்கிரிகையில் அண்ணாமலை பங்கேற்பார்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)